முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைத்த சம்பவம்: வனச்சரகர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையே பாறைக்கு வெடி வைத்தாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைத்தல், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அருவியில் உள்ள பாறையை உடைத்து மேம்படுத்தும் பணி வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாகவும், அணையில் இருந்து மணல் எடு்த்ததாகவும் புகார் கூறப்பட்டது. புலிகள் காப்பக எல்லையில் வெடி வைத்து பாறையை உடைத்து சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆட்சியர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை மறுப்பு:

அருவியில் பாறையை கம்பிரஷ்ர் கொண்டு துளையிட்டு உடைக்கப்பட்டது. அருவி பராமரிப்பு பணிக்காக அணையில் இருந்து மணல் எடுக்கப்பட்டது என புலிகள் காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி தெரிவித்திருந்தார்.இந்த புகாரை தொடர்ந்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இதற்கிடையே அருவியில் சிங்கம்பட்டியை சேர்ந்த தளவாய் என்பவர் குளிக்க சென்றபோது, அங்கு கடையம் அருகே ஆவுடையானூரை சேர்ந்த குமரேசன் (54), கல்லிடைக்குறிச்சி மேல்முகம்நாடார் தெருவை சேர்ந்த சிங்கத்துரை (35) ஆகியோர் பாறைக்கு வெடி வைத்ததாக அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

வனச்சரகர் சஸ்பென்ட்: பாறைக்கு வெடி வைத்த பிரச்னையில் அம்பாசமுத்திரம் வனச்சரகர் எம். பாலேந்திரனை, தலைமை வனப்பாதுகாவலரும், கள இயக்குநருமான சுப்ரத்மஹாபத்ரே தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →