முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவர் வீட்டில் திருட்டு

பாளையங்கோட்டை பெருமாள்புரம் 22 வது தெருவில் வசிப்பவர் ஸ்ரீஷைனிங்க். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்து வருகிறார். வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஷைனிங்க்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் பூட்டியிருந்த அரசு மருத்துவர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் 22 வது தெருவில் வசிப்பவர் ஸ்ரீஷைனிங்க். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்து வருகிறார். வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஷைனிங்க், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றிருந்தனர். ஸ்ரீஷைனிங்க் குடும்பத்தினர் இல்லாததால் நகை, பணத்தின் மதிப்பு தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →