கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பு மிரட்டல்? கூடங்குளம் அணு உலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
கூடங்குளம் அணு உலையை தகர்க்கப்போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு
கூடங்குளம் அணு உலையை தகர்க்கப்போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் தமிழக் காவல்துறையை கேரள உளவுப் போலீஸார் உஷார்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரளத்தைச் சேர்ந்த நக்சல் அமைப்பு விடுத்திருந்த மிரட்டலில் கூடங்குளம் அணு உலையை அக்.16, 17ஆம் தேதிதிகளில் தகர்க்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாம். இதையடுத்து கூடங்குளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.