சிதம்பரம் இளைஞருக்கு சாதனையாளர் விருது: புதுச்சேரி முதல்வர் வழங்கினார்
சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜே.முத்துக்குமரன் (32). விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவர் 25 நாட்களில் ரூ.22 ஆயிரம் மதிப்பில் 8 கிராம் 200 மில்லி தங்கத்தில் ஒன்றரை இன்ச்
8 கிராம் தங்கத்தில் சிறிய தாஜ்மஹால், 3 கிராம் தங்க ஊஞ்சல் தயாரித்த சிதம்பரம் இளைஞருக்கு அசிஸ்ட் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் (ASSIST WORLD RECORDS RESEARCH FOUNDATION) சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜே.முத்துக்குமரன் (32). விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவர் 25 நாட்களில் ரூ.22 ஆயிரம் மதிப்பில் 8 கிராம் 200 மில்லி தங்கத்தில் ஒன்றரை இன்ச் அளவிலான தாஜ்மஹாலை அழகாக வடிவமைத்து தத்ரூபமாக தயாரித்துள்ளார். மேலும் 3 கிராம் தங்கத்தில் அழகிய வடிவில் தங்க ஊஞ்சல் ஒன்றை செய்துள்ளார்.
இவர் 2010 ஆண்டு 840 மில்லி கிராம் தங்கத்தில் மின்விசிறி (240 மில்லி), மண்வெட்டி (140 மில்லி), அரிவாள் (30 மி), கைவிசிறி (20 மி), சிறிய தாலி (100 மி), பெரிய தாலி (150 மி), மோதிரம் (40மி), தாலிபொட்டு (40 மி), தாலிகுண்டு (180 மி) ஆகிய 9 வகை நகை மற்றும் பொருள்களை தயாரித்துள்ளார். அத்துடன் 13 கிராம் வெள்ளியில் அடிபம்பு ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த அடிபம்பை அடித்தால் தண்ணீர் வரும் அளவில் அழகாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த இளைர் ஜே.முத்துக்குமரனுக்கு புதுச்சேரி மதர்தெரசா இன்ஸ்டியூட் ஆஃப் ஹெல்த் சயன்ஸ் வளாகத்தில் அக்.15-ம் தேதி நடைபெற்ற விழாவில் அஸிஸ்ட் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி இவ்விருதினை வழங்கி கவுரவித்துள்ளார். விழாவிற்கு பவுன்டேஷன் நிறுவனத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்த விருது தனது கின்னஸ் சாதனை கனவினை நிறைவேற்றும் என விருது பெற்ற இளைஞர் ஜே.முத்துக்குமரன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.