முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிதம்பரத்திற்கு அக்.20 தேர்தல் பார்வையாளர் வருகை

தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் அக்.1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த நடவடிக்கைகளை பார்வையிட சிதம்பரம் நகருக்கு அக்.20-ம் தேதி தேர்தல் பார்வையாளர் எம்.வீரசண்முகமணி ஐஏஎஸ் வருகை தருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:

தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் அக்.1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் படிவம்-6ம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6-A, பெயர் நீக்கத்திற்கு படிவம்- 7, அனைத்து திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் அக்.20ம் தேதி, 27-ம் தேதி நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளை பார்வையிட தேர்தல் பார்வையாளரும், சென்னை கருவூலங்கள் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான எம்.வீரசண்முகமணி ஐஏஎஸ் அக்.20-ம் தேதி வருகை தர உள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம்கள், மனித சங்கிலி, சைக்கிள் பேரணி, கட்டுரைப் போட்டி, விழிப்புணர்வு நாடகம், கோலப்போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களை கண்காணிக்க மண்டல அலுவலர்கள் நியமிக்கபப்ட்டுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்சாரம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளதா என கண்காணித்து அறிக்கை தருமாறு மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அறை அமைக்கப்பட்டு, அனைத்து புகார்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புகார் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04144- 222256, 222322.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.