முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் விபத்தில் காயமுற்றவர்கள், தகராறில் காயமுற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் சிக்கிய

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் விபத்தில் காயமுற்றவர்கள், தகராறில் காயமுற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு உதவவும், மருத்துவமனை வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவிடம் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து மருத்துவக்கல்லூரி புறநோயாளிகள் பிரிவு அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா தலைமை வகித்தார். பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் பதிவாளர் என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்ஆலிவர் பொன்ராஜ், கிருஸ்துராஜ், ஸ்ரீமாலினி, மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் நிர்மலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் யு.சண்முகம், உதவி கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.