சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூர உற்சவம்: நாளை தொடக்கம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் நாளை (அக்.21-ம் தேதி) கொடியேற்றத்துடன்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் நாளை (அக்.21-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இக்கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் நாளை (21-10-2013) திங்கள்கிழமை இரவு 8-00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்.29-ம் தேதி திருத்தேர் உற்சவமும், அக்.30-ம் தேதி புதன்கிழமை பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், அக்.31-ம் தேதி வியாழக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.