ஆந்திராவிற்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி
தற்போதைய செய்திகள்ஆந்திராவிற்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி கைப்பற்றினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.அப்போது புதுவாயல் கூட்டுச் சாலை அருகே சாலையோரம் தார்பாய் மூடி ஏதோ வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதனை சோதித்தார். அப்போது அங்கு சிறு சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி கட்டப்பட்டு ஆந்திராவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கேட்பாரற்று கிடந்த அந்த 90 ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் அந்த அரிசி மூட்டைகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மொத்த எடை 4 டன்னாகும். இந்த ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.