முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் உ.பி ஜோசியர் மரணம்

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (45). இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு மாதம் முன்பு சொந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:23 PM
பகிர்:

சிதம்பரம் அருகே விபத்தில் சிக்கி காயமுற்று புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உபி ஜோதிடர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (45). இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு மாதம் முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் சிதம்பரத்தில் உள்ள மகள் சுமங்கலியை பார்க்க அக்.20-ம் தேதி சின்னகுமட்டியைச் சேர்ந்த நண்பர் ராமதாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வந்துள்ளார்.

மகளை பார்த்துவிட்டு சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக பி.முட்லூர் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் தூாக்கி எறியப்பட்டு படுகாயமுற்றனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஜோசியர் ஏகாம்பரம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.