முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைந்தது

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை இரவு 9.43 க்கு தொடங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைந்தது என திட்ட இயக்குநர் ஆர். சுந்தர் தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை இரவு 9.43 க்கு தொடங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைந்தது என திட்ட இயக்குநர் ஆர். சுந்தர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நிதியுதவியுடன் 2 அணுஉலைகள் நிறுவப்பட்டுள்ளன. தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இவற்றின் முதல் உலையில் அக். 22 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியது.

தொடர்ந்து 2 மணி நேரத்தில் முதல் அணு உலையில் டர்பன் இயக்கப்பட்டு 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக அணுமின் நிலையம் தரப்பில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. முதலில் 75 மெகா வாட்டும், பி்ன்னர் 160 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டு, மின்சாரம் இந்திய அணுசக்தி கழகத்தின் 20 வது நிலையமாக அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ள மத்திய தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பிறகு தண்ணீரை குளிர்விக்க செய்யும் பணிக்காக டர்பைன் நிறுத்தப்பட்டது.

முதல் முறையாக உற்பத்தி தொடங்கியதும், மத்திய தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் சாதனங்களை குளிர்வித்து, அதன் பின்னர் இந்திய அணுசக்தி கழகத்தின் ஒப்புதலுடன் அடுத்த 48 மணி நேரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மின் உற்பத்தி மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு 9.43 மணிக்கு தொடங்கியதாகவும், உற்பத்தியான 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைந்தது என்றும் அணுமின் திட்ட இயக்குநர் ஆர். சுந்தர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →