தற்போதைய செய்திகள்

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே பாவலக்குறிச்சியைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி முருகலட்சுமி(37). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள குடிநீர் சுத்தகரிப்பு ஆலையில் தொழிலாளியாக இருந்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாவலக்குறிச்சியைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி முருகலட்சுமி(37). இவர் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள குடிநீர் சுத்தகரிப்பு ஆலையில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் என்றும் போல் ஆலை வேலைக்கு திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 40 வயது மதிப்பிலான மர்ம நபர் முருகலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினாராம்.

இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் முருகலட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT