தற்போதைய செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்: குற்றஞ்சாடப்பட்ட காப்பக இல்ல பராமரிப்பாளருக்கு ஆயுள் சிறை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூர் கிரே நகரில் கருணை இல்லம் (காப்பகம்) நடத்தி வந்தவர் ஜார்ஜ் முல்லர். இவரது தம்பி யோவான் (63),  ககுணை இல்லத்தை பராமரித்து

ஜெபலின்ஜான்

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட காப்பக இல்ல நிர்வாகிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூர் கிரே நகரில் கருணை இல்லம் (காப்பகம்) நடத்தி வந்தவர் ஜார்ஜ் முல்லர். இவரது தம்பி யோவான் (63),  ககுணை இல்லத்தை பராமரித்து வந்தார். இந்த கருணை இல்லத்தில் தலா 14 சிறுவர், சிறுமிகள் இருந்து வந்தனர்.

 இந்நிலையில் இங்கு தங்கியிருந்த காங்கயம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாராம். இச்சம்பவத்தில் யோவானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை திங்களூர் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் 17.7.2012-ல் நடந்தது.

 இவ்வழக்கு ஈரோடு மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதிகட்ட விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீ்ஷ்குமார், குற்றஞ்சாட்டப்பட்ட யோவானுக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT