தற்போதைய செய்திகள்

மாநாட்டில் இந்தியா பங்கேற்றால்தான் தமிழர் உரிமையை பெற்றுத்தர முடியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால்தான் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்

ஜெபலின்ஜான்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால்தான் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

 இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக ரூ.48,000 கோடியில் இந்திய அரசு நிதி உதவிகளை அளித்து இலங்கை அரசு மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக வடமாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று விக்னேஷ்வரன் தனிப்பெரும்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

 அந்த மாகாண அரசுக்கு காவல்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை ஏற்படுத்தும் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கான முழு உரிமைகளையும் பெற்றுத்தர வேண்டுமெனில் இலங்கையுடன், இந்திய அரசு நல்ல உறவுடன் இருப்பது அவசியம். எனவே, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்.

 தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகள் பேசாமல் இருந்தாலே எங்களது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என இலங்கைத் தமிழர் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கை அகதிகளின் பராமரிப்பில் இங்குள்ள சில அரசியல்கட்சித் தலைவர்கள் உள்ளனர். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தேவையற்ற வாதங்களை அவர்கள் கிளப்பிவிடுகின்றனர்.

  தானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை பொதுமக்களுக்கு மட்டுமன்றி, கட்சித் தொண்டர்களுக்கு காண்பிக்க திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

 வல்லபாய் பட்டேல் பற்றியோ அல்லது வேறு காங்கிரஸ் தலைவர்கள் பற்றியோ பேச மோடிக்கு தகுதி இல்லை. ஊதப்பட்ட பலூனை போன்றவர் மோடி. இன்னும் 6 மாதங்களுக்கு பின்னர், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போல மோடியும் காணாமல் போய்விடுவார்.

 மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இருநாட்டு அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும். விஜயகாந்த் எனது நீண்டகால நண்பர். அவரிடம் அரசியல் மட்டுமன்றி பிற விஷயங்கள் குறி்த்தும் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறேன் என்றார்.

 பேட்டியின்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஆர்.எம்.பழனிசாமி (தெற்கு மாவட்டம்), ஈ.பி.ரவி (மாநகர் மாவட்டம்), மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மைப்பிரிவு பொதுச்செயலர் கே.என்.பாஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT