முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே எரிந்த நிலையில் அதிமுக கிளைச் செயலாளர் உடல்

புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலதைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி பழனியம்மாள் (42). அதிமுக கிளைச் செயலாளர் இவர் இன்று காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:28 PM
பகிர்:

சிதம்பரம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பழனியம்மாள் பாதி எரிந்த நிலையில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலதைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி பழனியம்மாள் (42). அதிமுக கிளைச் செயலாளர் இவர் இன்று காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கடலூரிலிருந்து மோப்பநாய் புருனோ மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →