கோபி அருகே விபத்து 3 மாத குழந்தை சாவு.
கோபி அருகே கார் மீது லாரி மோதியதில் 3 மாத குழந்தை உயிரிழந்தது.
கோபி அருகே கார் மீது லாரி மோதியதில் 3 மாத குழந்தை உயிரிழந்தது.
ஈரோட்டைச் சேர்ந்தவர் குமரவேல்(35). இவர் கட்டட கான்டிராக்டர். இவரது மனைவி அன்பு(30), இவர்களது மகன் (3 மாத ஆண் குழந்தை. இன்னமும் பெயர் வைக்கவில்லை). அக்கா சக்தி(39) ஆகியோர் ஒரு காரில் கோபி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் திங்கள்கிழமை சென்றனர்.
காரை மணி(54) என்பவர் ஓட்டினார். சாமி தரிசனம் செய்த பின்னர் கார் சத்தி நோக்கி அத்தாணி ரோட்டில் சென்றது. அரக்கன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகில் மூலவாய்க்கால் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 மாத ஆண் குழந்தை தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
டிரைவர் மணி, குமரவேல்,அன்பு, சக்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக 4 பேர்களும் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.