முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலைமறியல்: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே சர்வராஜன்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களும், பெண்களும் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:29 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே சர்வராஜன்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களும், பெண்களும் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகே சர்வராஜன்பேட்டையில் பஸ்நிறுத்தம் அருகே மெயின்ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடந்த மாதம் மறியலில் ஈடுபட்டனர். அப்போது செப்.1-ம் தேதிக்குள் மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் கடை மாற்றப்படுவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவது இரவு 10 மணிக்கு மேல் மதுபானக்கடையில் பாட்டில் வாங்கி விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், பெண்களும் செவ்வாய்க்கிழமை காலை டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, சமூகநல வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்திற்கு கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் சாலைமறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →