முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பல்கலை. இணைப் பேராசிரியர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது உறுதியானது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இ.சம்பத் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மனைவியே,

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:30 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இ.சம்பத் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மனைவியே, கள்ளக்காதலனுடன் உதவியோடு காரை ஏற்றி கொலை செய்துள்ளது போலீஸார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் கனகசபைநகர் 7-வது கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் இ.சம்பத் (35). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் எல்க்டிரிகல் & இன்ஸ்ட்ருமெண்டேஷன் உதவிப் பேராசிரியராக உள்ளார். அண்ணாமலைநகரில்  கம்ப்யூட்டர் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் கிரண்ரூபினி. 4-வயதில் சோனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் வீட்டிலிருந்த சம்பத்திடம் அவரது மனைவி வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு சோடா வாங்கி வருமாறு கூறியுள்ளார். சோடா வாங்க மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பத் வீட்டிலிருந்து 300 அடி தூரத்தில் தலை முழுவதும் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில் சம்பத் மர்மநபர்களால் காரை ஏற்றிக் கொலை செய்திருக்கலாம் என்றும், உடல் அருகே கார் முன்னும், பின்னும் சென்ற தடம் உள்ளதாகவும் போலீஸார் சந்தேகத்தனர். உடலுக்கு சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது. தனது மகன் சம்பத் சாவில் மர்மம் உள்ளதாக தந்தை இளங்கோ, நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உதவிப் பேராசிரியர் இ.சம்பத் மர்மசாவு குறித்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் நகர போலீஸ் இன்ல்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்போது காரின் உரிமையாளரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவியே, கள்ளக்காதலுடன் சேர்ந்து உதவிப் பேராசிரியர் சம்பத்தை காரை ஏற்றி கொலை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் சம்பத்தின் மனைவி மற்றும் கார் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →