முகப்பு
தற்போதைய செய்திகள்

பூமிக்கடியிலிருந்து கிடைத்த 21 சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

காட்டுமன்னார்கோயில் அருகே பூமிக்கடியிலிருந்து கிடைத்த பழமை வாய்ந்த 21 ஐம்பொன் சிலைகளை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:30 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே பூமிக்கடியிலிருந்து கிடைத்த பழமை வாய்ந்த 21 ஐம்பொன் சிலைகளை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 21 சிலைகளையும் மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் மீன்குட்டை அமைக்க குழி தோண்டியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (42) சில தினங்கள் முன்பு அவ்வழியே தனது வீட்டிற்கு சென்ற போது காலில் தடுக்கி சிலை ஒன்று தென்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்று கம்பியை எடுத்து வந்த தோண்டிய போது 21 சிறிய அளவிலான பழங்காலை ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளது. மேற்கண்ட 21 சிலைகளையும் வீட்டிற்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார். பின்னர் இரு சிலைகளை தவிர மற்றச் சிலைகளை கொத்தவாச்சேரியில் உள்ள தனது மனைவியின் தங்கை கணவர் சுப்பிரமணியன் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு பதுக்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்த சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான கடலூர் மாவட்ட தனிப்படைபோலீஸார் இன்று சவுந்தரராஜனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிலைகளை தான் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து போலீஸார் 21 சிலைகளையும் மீட்டு புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →