தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் விபரீதம்: எஸ்.பி.பட்டினத்தில் மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் கைது

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

கே. ரவி

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா சுந்தரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி(30) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முர்ஜிதாபானு(25)வுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அக்பர் அலி தினமும் மது அருந்துவது வழக்கம். மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். செவ்வாய்க் கிழமை இரவு அதே போல் பணம் கேட்டு முர்ஜிதா பானுவை  தொந்தரவு செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் அக்பர் அலி மனைவியின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் முர்ஜிதா பானு பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீசார் அக்பர்அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT