முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல்புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்ககூடாது, தமிழர்களை இழிவு படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் பாசறை சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி பல்கலைக்கழக மாணவர் பாசறை செயலாளர் சி.ராம்ஜி தலைமையில் மாவட்ட மாணவரணி தலைவர் ப.மாரியப்பன், அருள் என்கிற மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொறியியல் புல மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியபிரதமர் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு எதிராகவும் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments