சிதம்பரம் அருகே ஆட்டை விழுங்கிய முதலை!
சிதம்பரம் அருகே கீழ்தவிர்தாம்பட்டு கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து 200 கிலோ எடையுள்ள 5 அடி நீள முதலை ஒன்று குளக்கரையிலிருந்த ஆட்டை பிடித்து விழுங்கியது. இதனை பார்த்த ஊர்மக்கள்
சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்து ஆட்டை விழுங்கிய 5 அடி நீள முதலை வனத்துறையினரால் இன்று பிடிக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே கீழ்தவிர்தாம்பட்டு கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து 200 கிலோ எடையுள்ள 5 அடி நீள முதலை ஒன்று குளக்கரையிலிருந்த ஆட்டை பிடித்து விழுங்கியது. இதனை பார்த்த ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், சி.பழனியப்பன் மற்றும் நந்தமங்கலம் ராஜி தலைமையிலான முதலை பிடிக்கும் குழுவினர் பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வந்த முதலையை பிடித்தனர். பின்னர் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் முதலையை கொண்டு விட்டனர்.