வீராணம்ஏரியில் குறைந்தளவே மீன்குஞ்சுகளை விட்ட மீன்வளத்துறையினர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியில் நீர்நிரம்பியதும் ஆண்டு தோறும் மீன்வளத்துறையினரால் இரண்டு லட்சத்திற்கும் மேல் மீன்குஞ்சுகள் விடப்படுவது வழக்கம். இந்த
கடலூர் மாவட்டத்தில் வீராணம்ஏரியில் இந்த ஆண்டு பெயருக்காக குறைந்தளவே மீன்குஞ்சிகளை விட்டதால் மீன்பிடிப்போர் மிகவும் ஏமாற்றம் அடைந்து கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியில் நீர்நிரம்பியதும் ஆண்டு தோறும் மீன்வளத்துறையினரால் இரண்டு லட்சத்திற்கும் மேல் மீன்குஞ்சுகள் விடப்படுவது வழக்கம். இந்த மீன்குஞ்சிகளை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த மீன்பிடிப்போர் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு ஏரியில் வளர்ந்து மீன்களை பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணைஇயக்குநர் இளம்வழுதி மற்றும் அலுவலர்கள் ஏரியில் கடந்த சில தினங்கள் வீராணம்ஏரியில் கலியமலை எனுமிடத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பெயரளவிற்கு சுமார் 2500 மீன்குஞ்சுகளை விட்டு, விட்டு புறப்பட்டுள்ளனர். இதனையறிந்த மீன்பிடிப்போர் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்பை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீன்வளத்துறையினர் ஏரியில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகளை விட்டதாக தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். குறைந்தளவே பெயருக்கு ஏரியில் மீன்குஞ்சுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் விட்டதால் மீன்பிடிப்போர் ஏமாற்றமடைந்து கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.