முகப்பு
தற்போதைய செய்திகள்

கடன் தொல்லையால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை

மதுரையை அடுத்த ஜெயந்திபுரத்தை சேர்ந்த மணிநாடார் மகன் ஜெயகோபி. இவர் கும்மிடிப்பூண்டி பால கிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் குடும்பத்தினருடன் சில

தற்போதைய செய்திகள்

கடன் தொல்லையால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை

மதுரையை அடுத்த ஜெயந்திபுரத்தை சேர்ந்த மணிநாடார் மகன் ஜெயகோபி. இவர் கும்மிடிப்பூண்டி பால கிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் குடும்பத்தினருடன் சில

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் பேக்கரி நடத்தி வந்த ஜெயகோபி (30) கடன் தொல்லை காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மதுரையை அடுத்த ஜெயந்திபுரத்தை சேர்ந்த மணிநாடார் மகன் ஜெயகோபி. இவர் கும்மிடிப்பூண்டி பால கிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் குடும்பத்தினருடன் சில ஆண்டுகளாக வசித்த வருகிறார். இவருக்கு பானுமீனா(25) என்ற மனைவியும் நிருதுலா (3) என்ற மகளும் உள்ளனர்.ஜெயகோபி நடத்தி வந்த பேக்கரியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ஆகிய இடங்களில் தனியார் சீட்டு நிறுவனங்களில் ஏலச்சீட்டில் சேர்ந்து அதனையும் அவர் குடும்ப செலவுக்காக எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏலச்சீட்டு நிறுவனங்களும், கடன்காரர்களும் பணம் கேட்டு தொல்லை கொடுத்த நிலையில் திங்களன்று இரவு அவரது குடும்பத்தார் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்த போது திங்களன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிய ஜெயகோபி  கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜெயகோபியின் தந்தை மணிநாடார் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் முனிவேல் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →