மீனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் படுகாயம்
சிதம்பரம் அருகே ஆற்றில் துள்ளிக் குதித்து கொண்டிருந்த மீனை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது எதிர்புறத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொருவர் மீது துப்பாக்கி ரவைகள் பட்டு படுகாயம் அடைந்தார்.

குமாரக்குடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தருமன் (25). இவர் வியாழக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் பாழ்வாய்க்காலில் ஆற்றில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த மீனை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது எதிர்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சடையன் (60) என்பவர் மீது துப்பாக்கி ரவைகள் சுமார் 10-க்கும் மேற்பட்டது பாய்ந்து படுகாயமுற்றார். படுகாயம் அடைந்த சடையன் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.