முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊதியம் வழங்க கோரி கல்லூரி கவுரவ விரிவையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும், பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும், யுஜிசியின் அடிப்படை ஊதியம் ரூ.15.600-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் க.வெற்றிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 20 கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments