முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நந்தனார் கல்வி நிறுவனங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம் அரசு நந்தனார் கல்வி நிறுவனங்களை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சிதம்பரம் அரசு நந்தனார் கல்வி நிறுவனங்களை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட அரசு நந்தனார் கல்வி நிறுவனங்களை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்வி தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அழைத்து வலியுறுத்தினார். மேலும் மாணவர்களிடம் கல்வி பயிற்சி குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் ஆசிரியர்களிடம் தெரிவிக்கையில் ஏழை மாணவர்கள் இங்கு பயிலுகின்றனர். எனவே உங்கள் வீட்டு குழந்தைகள் போன்று கருதி அம்மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள்  பெறவும் கடுமையாக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement

பின்னர் அமைச்சர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடங்கள், விடுதிகள், நந்தனார் ஐடிஐ விடுதி, விடுதி உணவுக்கூடம், சாப்பாட்டுக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

விடுதிகள், உணவுக்கூடம், சாப்பாட்டுக்கூடம், கட்டடங்களை சீரமைக்க நிதிஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் உடன் வந்த மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் (பொறுப்பு) பாதாளத்திடம் விடுதி மற்றும் உணவகங்களின் கணக்கை சரிபார்த்து தவறு நடைபெற்றிருந்தால் மாவட்ட ஆட்சியரை கலந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் என்.சுப்பிரமணியன்  உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் புவனகிரியில் உள்ள அரசு ஆதிதிராவிட நல விடுதியினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கணக்கு மற்றும் ஸ்டாக்குகளை சரி பார்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். அமைச்சர் திடீர் ஆய்வின் போது கடலூர் மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் (பொறுப்பு) பாதாளம் உடன் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments