சிதம்பரம் : அதிமுக கிளைச் செயலாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது
சிதம்பரம் அருகே அதிமுக மகளிரணி கிளைச் செயலாளர் கொலை வழக்கில் புவனகிரியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே அதிமுக மகளிரணி கிளைச் செயலாளர் கொலை வழக்கில் புவனகிரியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலதைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி பழனியம்மாள் (42). அதிமுக கிளைச் செயலாளர் இவர் கடந்த செப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பழனியம்மாள் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பாண்டியன், புவனகிரி கிராம நிர்வாக அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ பாண்டியனை புவனகிரி போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸார் விசாரணையில் மேல்புவனகிரி கவரப்பாளையத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (31) என்பவருக்கும், பழனியம்மாளுக்கு கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக தெரியவந்தது. இந்நிலையில் பாண்டியனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், தனக்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என பழனியம்மாள் வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்த பாண்டியன் சம்பவத்தன்று பழனியம்மாள் வீட்டிற்கு சென்று அடித்து அவரை கொலை செய்து, சிம்னி விளக்கில் உள்ள மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து எரிந்து விட்டு தலைமறைவானது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து புவனகிரி போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
Advertisement