முகப்பு
தற்போதைய செய்திகள்

துணை ஆய்வாளரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது : கட்சியை வீட்டு நீக்கம்

சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட இருவரை குமராட்சி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:44 PM
பகிர்:

சிதம்பரம் அருகே மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட இருவரை குமராட்சி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் எனுமிடத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணலை பொக்லீன் மூலம் எடுத்து கடத்துவதாக வந்த புகாரை அடுத்து குமராட்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் காவலர்கள் புதன்கிழமை அங்கு சென்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்போது ம.உடையூர் எனுமிடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை வழிமறித்து தாக்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, காவலர் மாரிமுத்து ஆகிய இருவரும் காயமுற்றனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவராஜன் வழக்குப் பதிந்து அதிமுகவைச் சேர்ந்த மேலராதாம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபாலன் (45), காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொக்லீன் டிரைவர் குரு (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபாலனை கட்சியை விட்டு நீக்கம் செய்து கட்சி பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments