முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ஐ.டி.ஐ மாணவர்களுக்குள் மோதல்: 3 பேர் கைது

விருதுநகரில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 19 செப்டம்பர், 2013 at 4:46 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 7:14 PM

விருதுநகரில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கமலை(18). இவர் விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இயந்திரவியல் இறுதியாண்டு படித்து வருகின்றார். திருத்தங்கல் அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயபாண்டி(18), க.காளிராஜன்(18), ம.காளிராஜன்(17) ஆகியோரும் இதே தொழிற்பயிற்சி பள்ளியில் வயர்மேன் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் விருதுநகருக்கு வந்து ஐ.டி.ஐக்கு பஸ்ஸில் செல்லும் போது பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து புதன்கிழமை மாலையில் பள்ளி முடிந்து சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது தகராறு செய்துள்ளனர். இதில், மூன்று பேரும் சேர்ந்து தங்கமலையை தாக்கி முதுகில் பிளேடால் கீறி காயப்படுத்தியுள்ளனர். எனவே இது தொடர்பாக தங்கமலை சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.