தற்போதைய செய்திகள்

பட்டா மாறுதல் வழங்க ரூ.3000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

ஈரோடு காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் அரசலக்குமார்(36).இவர் பெருந்துறை அருகே கல்லம்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த சிவமூர்த்தி

ஜெபலின்ஜான்

ஈரோடு காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் அரசலக்குமார்(36).இவர் பெருந்துறை அருகே கல்லம்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் வேண்டி வி.ஏ.ஓ.விடம் மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலைகழிக்கப்பட்ட சிவமூர்த்தியிடம் ரூ.3000 கொடுத்தால் மாற்றம் செய்யப்படும் என அரசலக்குமார் கூறியுள்ளார்.இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிவமூர்த்தி புகார் அளித்தார். டி.எஸ்.பி. முருகேசன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய போலீஸார் சிவமூர்த்தியிடம் இருந்து அரசலக்குமார் ரூ.3000 பணம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT