ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழனன்று 33-வது முறையாக உண்டியல் திறப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை 23-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை 23-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது.
கடந்த 2013 ஜூன் 20-ம் தேதி 22-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 22 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 23 ஆயிரத்து 913 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன் முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. தற்போது வியாழக்கிழமை (ஜூன் 20) இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.முருகன் ஆகியோர் முன்னிலையில் 23-வது முறையாக உண்டியல் எண்ணப்படுகிறது.
Advertisement