திருநெல்வேலியில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வண்ணாரப்பேட்டை சாலையில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வண்ணாரப்பேட்டை சாலையில் பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் வெள்ளிக் கிழமை காலை திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து போராட்டத்தைக் கைவிட்டுச் செல்லும்படி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.