வீட்டில் கோபித்துக்கொண்டு திருவண்ணாமலை வந்த சென்னை மாணவிகள்:பெற்றோரிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் நால்வரைப் போலீஸôர் அவர்களது பெற்றோர்களிடம்
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் நால்வரைப் போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையை மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பகல் 4 மாணவிகள் சுற்றித் திரிந்தனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நால்வரும் சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இப்போது தேர்வு எழுதிக் கொண்டிருப்பதாகவும், தேர்வுக்கு நல்ல முறையில் படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 4 மாணவிகளையும் போலீஸôர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு திருவண்ணாமலை வந்த பெற்றோர்களிடம் 4 மாணவிகளையும் போலீஸார் ஒப்படைத்தனர்.