தற்போதைய செய்திகள்

தேர்தல் ஆணையம் மீது வழக்கு போடுவோம்: ஜெயலலிதா

ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர் செலவுக்கணக்கு குறித்து தேவையற்ற கெடுபிடிகளைக் கையாளும் தேர்தல் ஆணையம் மீது அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று கூறினார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

தமிழ்ச்செல்வன்

ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர் செலவுக்கணக்கு குறித்து தேவையற்ற கெடுபிடிகளைக் கையாளும் தேர்தல் ஆணையம் மீது அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று கூறினார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் என்னென்ன நன்மை செய்தோம் என திமுக வாக்கு கேட்கவில்லை, கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் பிரமதர் ஆவார் என்றுதான் திமுக வாக்கு கேட்கிறது. தமிழக உரிமைகள் பறிபோகக் காரணம் திமுக சுட்டிக்காட்டிய காங்கிரஸ் அரசு தான் என்று கூறினார் ஜெயலலிதா.

மேலும், திமுக ஆட்சியில் 8,000 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி அதிமுக ஆட்சியில் 12,000 மெகாவாட்டாக உயர்ந்தது, புதிய மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறை எதிர்க் கட்சிகள் பெரிதாக்குகின்றன என்றும் பேசினார் ஜெயலலிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT