முகப்பு
தற்போதைய செய்திகள்

கடனை செலுத்தாத சுயஉதவிக்குழு பெண்கள் படத்தை ஒட்டிய வங்கி நிர்வாகத்தினர்: எதிர்ப்பினால் அகற்றம்

சிதம்பரம் அருகே உள்ள கானூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை அறிவிப்பு பலகையில் விவசாயக் கடன் பெற்று தவணை செலுத்தாத விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் புகைப்படங்களை ஓட்டி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கானூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை அறிவிப்பு பலகையில் விவசாயக் கடன் பெற்று தவணை செலுத்தாத விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் புகைப்படங்களை ஓட்டி விளம்பரப்படுத்தபட்டிருந்தது.

இதற்கு காட்டுமன்னார்கோயில் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயலாளர் எஸ்.பிரகாஷ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கே.ஆதிமூலம் ஆகியோர் விவசாயிகளையும், சுயஉதவிக்குழு பெண்களையும் அவமானப்படுத்தி சமூக விரோதிகளை போன்று அறிவிப்பு பலகையில் ஒட்டப்டடுள்ள புகைப்படத்தை அகற்ற வேண்டும். இல்லையெனில் வங்கி முன்பு பெண்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனை அடுத்து வங்கி மேலாளர் அறிவிப்பு பலகையில் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை அகற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.