சிதம்பரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் வெள்ளிக்கிழமை சிதம்பரம் மன்மதசாமி கோயிலில் வழிபட்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் வெள்ளிக்கிழமை சிதம்பரம் மன்மதசாமி கோயிலில் வழிபட்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சிதம்பரம் காரியபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமன்மதசாமி கோயிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து, பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் தனது தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அப்போது பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் நகரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி அரியலூர் மாவட்டச் செயலாளர் வைத்தி, கடலூர் மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், நகரத் தலைவர் பி.கே.அருள், தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், தேர்தல் பொறுப்பாளர் பாலரவி, நகரத் தலைவர் ஆர்.திருமாறன், விவசாய அணித் தலைவர் திருமேணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தர், தேர்தல் பொறுப்பாளர் ஏ.என்.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.