சிதம்பரம் அருகே பசுமடத்தில் இருந்த 122 மாடுகள் பறிமுதல்: போலீஸார் அதிரடி நடவடிக்கை
சமீபத்தில் தேனி, கம்பம் பகுதியில் கேரளவிற்கு கடத்திச் சென்ற 124 அடிமாடுகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மாடுகள் புதுதில்லியை தலைமையிடமாக கொண்ட கெள ஜியான் (Cow
சிதம்பரம் அருகே உள்ள பசுமடத்தில் சரியாக பராமரிக்கப்படாததால், தொண்டு நிறுவனம் வழங்கிய 112 மாடுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சமீபத்தில் தேனி, கம்பம் பகுதியில் கேரளவிற்கு கடத்திச் சென்ற 124 அடிமாடுகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மாடுகள் புதுதில்லியை தலைமையிடமாக கொண்ட கெள ஜியான் (Cow jyan) தொண்டு நிறுவனம் ஒன்றிடம் பராமரிக்க ஒப்படைக்கப்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் அருகே கொடியாளத்தில் பசுமடம் நடத்தி வரும் சசிக்குமார், அந்த மாடுகளை தான் பராமரித்து வளர்ப்பதாக கூறி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் விழுப்புரம் மதகடிப்பட்டில் சந்தையில் மேற்கண்ட மாடுகளிலிருந்து 6 மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த போது, தொண்டு நிறுவனத்தின் மாடுகள் என்பது தெரியவந்து போலீஸார் மாடுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸார் கெளஜியான் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெங்களூர் அமைப்பாளர் கெளசிக் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம், பராமரிக்க வழங்கப்பட்ட மாடுகளை அடிமாட்டிற்கு விற்பதாககவும், மாடுகளை தரமறுப்பதாகவும், எனவே மாடுகளை பறிமுதல் செய்து வழங்கும்படி புகார் அளித்தார். ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவிடம் மேற்கண்ட மாடுகளை பறிமுதல் செய்து, கெளஜியான் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினார்.
அதன் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் தாலுக்கா போலீஸார் கொடியாளம் கிராமத்தில் உள்ள பசுமடத்திற்கு சென்று பார்த்த போது மாடுகள் போதிய தீனி இல்லாமல், அவதியுற்று வந்தது தெரியவந்தது. மேலும் 124 மாடுகளில் 112 மாடுகள்தான் இருந்தது. மீதமுள்ள மாடுகள் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக, பசுமட நிர்வாகி தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் 112 மாடுகளை பறிமுதல் செய்து மயிலாடுதுறையில் உள்ள ஜெயம் கோசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.