நலிந்து வரும் விவசாய உற்பத்தியை விடுதலைச் சிறுத்தைகள் மீட்டெடுப்போம்: தொல்.திருமாவளவன்
நலித்து வரும், விவசாய உற்பத்தியை மீட்டெடுக்க, உற்பத்தி பொருள்களுக்கு ஆதார விலை கிடைக்க போராடுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில்
நலித்து வரும், விவசாய உற்பத்தியை மீட்டெடுக்க, உற்பத்தி பொருள்களுக்கு ஆதார விலை கிடைக்க போராடுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள துணை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உணவு பொருள்கள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பை தடுத்திட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விவசாய உற்பத்தி பாதுகாத்து, அவற்றி பெருக்குவதற்கும், வறட்சி, புயல், வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களால் வேளாண் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது இழப்பீடு பெறவும் பாடுபடுவோம். பயிர் காப்பீடு திட்டத்தை பாதுகாத்திடும் வகையில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்.
முந்திரி, கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட உடனேயே, அதன் ஆதார விலை கிடைப்பதற்கும் போராடுவோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.2500 கிடைக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மத்தியஅரசு உத்திரவாதம் அளித்திடவும் போராடுவோம். சிறிய, நடுத்தர விவசாயிகளுக்கு விதை, இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வழங்குவதற்கு, பொருளாதார நிலையைக் கருதி நூறு சதவீத மானியம் அளித்திடவும், அத்துடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற கடன்களை அடியோடு ரத்து செய்தியடுவ்ம போராடுவோம். நலிந்து வரும் விவசாய உற்பத்தியை விடுதலைச் சிறுத்தைகள் மீட்டெடுப்போம் என அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.