சிதம்பரம் பகுதியில் கடும் வெய்யல், கடும் மின்வெட்டு, மக்கள் அவதி!
சிதம்பரம் நகரில் காலை வேளையில் இரண்டு மணி நேரம், பிற்பகல் இரண்டு மணி நேரம், இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் என சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள்,
சிதம்பரம் பகுதியில் தினமும் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சிதம்பரம் நகரில் காலை வேளையில் இரண்டு மணி நேரம், பிற்பகல் இரண்டு மணி நேரம், இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் என சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது 95 டிகிரிக்கு மேல் கடும் வெய்யல் அடிக்கின்றது. இவ்வேளையில் மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.
குறிப்பாக காலை வேளையில் மின்வெட்டு செய்யப்படுவதால், குடிநீர் தேக்கத்தில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு சப்னை செய்யமுடியாமல் போவதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மின்மோட்டார் போட்டு நீரை தொட்டிக்கு ஏற்ற முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திமுக ஆட்சியில் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 3 ஆண்டுகளாகியும் மின்வெட்டு சரி செய்யவில்லை. தற்போது 6 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை புறக்கணித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.