முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜகவுடன் அதிமுக ரகசிய கூட்டு: திருமாவளவன்

பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஆயங்குடியில் ஜாமிஆ மஸ்ஜித் மூத்தவல்லி, புதுப்பள்ளிவாசலம் மூத்தவல்லி, அல்-அமீன் பள்ளிவாசல் மூத்தவல்லி, மஸ்ஜித்நூர் பள்ளிவாசல் மூத்தவல்லி மற்றும் என்.ஏ.பி பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள் மறறும் நிர்வாகிகள், வேட்பாளர் திருமாவளவனுக்கு வரவேற்பு அளித்தனர். லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் அங்கு வாக்கு சேகரிக்கும்போது திருமாவளவன் பேசியதாவது:

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், மதவாதத்திற்கும் இடையே நடைபெறுகிற யுக்கம். இஸ்லாமியர்களுக்கு இருக்கிற சிறப்பு சட்டத்தை நீக்கிவிட்டு, பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்துவதே பாஜகவின் நோக்கமாகும். நான் வெற்றி பெற்ற வேண்டும் என்பதைவிட, அகில இந்திய அளவில் பாஜகவிடமிருந்து இந்தியாவை காப்பாற்றி, சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தை, பாஜகவும் எதிர்க்கிறது. ஜெயலலிதாவும் எதிர்க்கிறார். பாஜகவுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது. எனவே ஜனநாயகம், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.