சிதம்பரம் அருகே 2 கண்டெய்னர் லாரியில் வந்த ரூ.1 கோடி சில்லரை நாணயங்கள் பறிமுதல்
சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் சென்னையிலிருந்து நாகப்பட்டினத்தை நோக்கி சென்ற ரூ.1 கோடி மதிப்பிலான சில்லரை நாணயங்கள் ஏற்றிச் சென்ற இரு கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பரிமேலழகன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு படையினர் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற இரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.1 கோடி மதிப்பிலான சில்லரை நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் எவ்வித போலீஸ் பாதுகாப்பின்றியும், வங்கி அதிகாரிகள் இல்லாமலும், ஆவணங்கள் எதுவும் இல்லாமலும் சில்லரை நாணயங்களை லாரி டிரைவர்கள் மட்டும் எடுத்துச் சென்றதால் கண்காணிப்பு படையினர் இருலாரிகளை பறிமுதல் செய்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுரையைச் சேர்ந்த் ஏபிபி டிரான்ஸ்போர்ட் கண்டெய்னர் லாரி மூலம் ரிசர்வ பேங்க ஆப் இந்தியாவிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சில்லரை நாணயங்கள் கொண்டு செல்வதாக லாரி டிரைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.