முகப்பு
தற்போதைய செய்திகள்

அன்புமணி வாகனம் தாக்கிய வழக்கு: மேலும் மூவர் கைது

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.இவர் தொகுதியில் கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பிரசார வாகனம் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.இவர் தொகுதியில் கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் கடந்த 3-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் மொரப்பூர் பகுதியில் வாகனம் மூலம் பிராசரம் செய்துகொண்டிருந்தார்.அப்போது, பெத்தூர் காலனி அருகே அன்புமணி பிரசார வாகனம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக அரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த அன்று இரவு ஒருவரும் அதற்கு அடுத்த நாள் மூவர் என 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தற்போது பெத்தூர் காலனியைச் சேர்ந்த சேது (18), பாப்பிசெட்டிப்பட்டி காலனியைச் சேர்ந்த சின்னராஜ்(32), அரூர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த வஜ்ரவேல் (35) ஆகிய மூவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →