மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மீறி தமிழக முதல்வர் ஜெயலலிதா, நல்லாட்சி புரிந்து வருவதாக நடிகை பபிதா கூறினார்.
நாமக்கல் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து நடிகை பபிதா நாமக்கல் நகரில் சனிக்கிழமை தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். நாமக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியது:
பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்தி வரும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மீறி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பெண் சமுதாயத்தை இழிவு படுத்தி பேசிய குஷ்புவுக்கு பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேச அருகதை இல்லை. தனது கட்சி வேட்பாளரின் பெயர் கூட தெரியாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டு வைத்துக் கொண்டு பல்வேறு ஊழல்கள் புரிந்துள்ளன. இத்தகைய ஊழல் கரைபடிந்த கட்சிகளை தேர்தலில் மக்கள் தூக்கியெறிய வேண்டும். இந்த தேர்தலில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இதில் நிச்சயம் தர்மம்தான் வெல்லும். இதன்படி, தமிழகத்தில் நடக்கும் மக்களாட்சி மேலும் வலுப்பெற்றிட மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.