முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராமசந்திரன் என்பவர்  துபாயில் கட்டுமான பணியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாதேவி தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை சிவகங்கையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு 2 மகன்களுடன் சென்று விட்டு இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆய்வு செய்த போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு  60 முதல் 70 சவரன் நகைகளும், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் வெள்ளி குத்து விளக்கு உள்ளிட 3 கிலோ வெள்ளி பொருட்களும், விலை உயர்ந்த பட்டுச்சேலைகளும், கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து மகாதேவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →