நாமக்கல் மாவட்டம் வரகூர் என்ற ஊராட்சியில் 4வது வார்டு பொதுமக்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர், அந்தப் பகுதியில் மயானப் பாதை அமைத்துத் தரவில்லை என்றும், தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாதையை மீட்டு, தங்களுக்கு பாதை அமைத்துத் தர உறுதியளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி, வாக்களிப்பதைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் துணை ஆட்சியர்- சிறப்பு அமலாக்கத்திட்ட அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, தேர்தல் முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவர்களை ஓட்டு போட வாருஙக்ள் என அழைத்தார். இதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் இன்னும் அவர்கள் வாக்களிக்கத் துவங்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.