தற்போதைய செய்திகள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 74.96 சதவீதம் வாக்கு பதிவு

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிட்டனர். இதில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை,

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 10 லட்சத்து ஒன்பாதிரத்து 114 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 6 சட்டப்பேரவை தொகுதியிலும் மொத்தம் 74.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் போட்டியிட்டனர். இதில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், வியாழக்கிழமை மக்களவை வியாழக்கிழமை நடந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இத்தொகுதியில், வேட்பு மனுத்தாக்கல் நிறைவு நாளுக்கு முன்பு வரையில் வாக்காளர்கள் சேர்ப்பு மனுக்கள் அளித்தனர். அதனால், மொத்தம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 238 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில், ஆண்கள் 6 லட்சத்து 66 ஆயிரத்து 436 பேர். பெண்கள் 6 லட்சத்து 79 ஆயிரத்து 714 பேர். திருநங்கைகள் 88 பேர் ஆவார்கள்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்கு பதிவு விவரம்: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் 2,67,411 மொத்த வாக்குகளில், 1,86,194 வாக்குகள் பதிவாகி 69.63 சதவீதமும், திருமங்கலம் தொகுதியில் 2,52,646 மொத்த வாக்குகளில் 1,94,479 வாக்குகள் பதிவாகி 76.90 சதவீதம், சாத்தூர் தொகுதியில் 2,11,487 மொத்த வாக்குகளில் 1,66,667 வாக்குகள் பதிவாகி 78.81 சதவீதமும், சிவகாசி தொகுதியில் 2,21,003 மொத்த வாக்குகளில் 1,66,880 வாக்குகள் பதிவாகி 75.51 சதவீதமும், விருதுநகர் தொகுதியில் 1,97,813 மொத்த வாக்குகளில் 1,43,653 வாக்குகள் பதிவாகி 72.62 சதவீதமும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,95,878 மொத்த வாக்குகளில் 1,51,241 வாக்குகள் பதிவாகி 77.21 சதவீதமும் என மொத்தம் 74.96 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இது கடந்த 2009 மக்களவை தேர்தலில் 9 லட்சத்து 88 ஆயிரத்து 861 மொத்த வாக்குகளில், 7 லட்சத்து 44 ஆயிரத்து 880 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது 74.97 சதவீதம் ஆகும். தற்போது, நடந்த மக்களவை தேர்தலில் 74.96 சதவீதம் என  அதிக வித்தியாசமில்லாமல் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT