முதியோர் உதவித் தொகை நிறுத்தப் பட்டதைக் கண்டித்து இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதால் வாபஸ்
சிதம்பரத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால், 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரின் மேற்கொள்ள இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால், 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரின் மேற்கொள்ள இருந்த சாகும் வரை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கான முதியோர் உதவித் தொகையினை வழங்கக் கோரி ஆகஸ்டு 1-ம் தேதி முதல் மேலவீதி அண்ணாசிலை அருகே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் அறிவித்திருந்தார். இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன், எம்.முகமது உசேன், இந்திய கம்யூ கட்சி செயலாளர் வி.எம்.சேகர், தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல் கட்டமாக முதியோர் உதவித்தொகை பெறும் 2 ஆயிரம் பயனாளிகள் நீக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிப்பது, 19,002 நபர்களுக்கு வழங்கப்பட்டு உதவித்தொகையினை மறுவிசாரணை 18-7-2014 முதல் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுற்று நடவடிக்கை மேற்கொள்வது. மேற்கண்ட முடிவுகள் குறித்து சிதம்பரம் உதவிஆட்சியரிடம் கருத்துரை கேட்டு கடிதம் அனுப்புவது, சாகுவரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.