விருதுநகர் அதிமுக செயலாளருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அதிமுகவின் நகரச் செயலாளராகவும், நகராட்சி உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவர் முகமது நயினார்(41). இவர் பழைய பேருந்து நிலையத்தில் கட்சி அலுவலகம் மற்றும் தேநீர் கடையும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் மாவீரன் மோடி பாரத பிரதமராகிவிட்டார். அதனால் இந்துக்களை தவிர்த்து முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு வெளியேறுங்கள். இல்லையென்றால் இங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். நகர செயலாளராக முஸ்லீம் இருக்கக் கூடாது. உடனே பதவியை ராஜினமா செய்ய வேண்டும். இல்லையென்றால் கொலை செய்வோம் எனவும் இப்படிக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ என அந்த மர்மக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நகர செயலாளர் முகமது நயினார் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.