மதுரையில் திமுகப் பொதுக்கூட்டத்துக்கு விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர் வைத்திருந்ததாக திமுக நிர்வாகி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.
மதுரை ஓபுளாப்படித்துறை பகுதியில் சில நாள்களுக்கு முன்பு திமுகப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி அபுதாஹிர் சார்பில் 6 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாம்.
உரிய அனுமதியின்றியும், விதிமீறியும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து விளக்குத்தூண் போலீ‘ஸார் திமுக நிர்வாகி அபுதாஹீர் மீது வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.