தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வரும் 14-ம் தேதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி பங்கேற்று பேச  இருக்கிறார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் கே.பி.எஸ்.பாண்டியன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி பேச இருக்கிறார். அதனால், கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகர் கழக செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், விவசாய அணி பிரிவினர், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட  பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT